தரையில் விழுந்த ஆப்பிள்
கையடக்க கம்ப்யூட்டர். டைப் செய்யத் தேவையில்லை. எழுதினாலே போதும். இப்படித்தான் அறிமுகமானது நியூட்டன்.
பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டென்ட் என்று இதை வரையறுத்திருந்தது ஆப்பிள். சுருக்கமாக PDA.
ஒரு டிஜிட்டல் நோட்டுப் புத்தகம் போலப் பயன்படுத்தலாம். இதில் எழுதுவதற்கென ஒரு டிஜிட்டல் பேனா (ஸ்டைலஸ்). பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
எழுத்துகள்தான் என்றில்லை. சின்னச் சின்ன உருவங்களைக் கூட இதனால் புரிந்துகொள்ள முடிந்தது.
இக்கருவியில் நியூட்டன் என்றொரு ஓ.எஸ் இருந்தது. இது மேக்கிண்டோஸ். அல்ல. முற்றிலும் வேறொரு ஓ.எஸ். ஆப்பிள் இதை லைசன்ஸிங் செய்தது. அதாவது விண்டோஸ் போல இதைப் பிற நிறுவனங்களும் தங்கள் கருவிகளில் பயன்படுத்தலாம். தாங்கள் செய்யும் டிஜிட்டல் அசிஸ்டென்ட்களில் இந்த ஆபரேட்டிங் சிஸ்டத்தை அவர்கள் இன்ஸ்டால் செய்யமுடியும். அப்படியும் சில கருவிகள் வந்தன.
நியூட்டன் வெளியான காலத்தில் அது ஒரு மேஜிக் போலத் தெரிந்தது. ஆனால் அதன் தொடக்ககாலக் கவர்ச்சி நீடிக்கவில்லை.













Add Comment