குவியம்
‘என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதுவே சிறப்பான கருவிகளைச் செய்யும் உபாயம்’. தன் முன்னிருந்த ஆப்பிள் குழுவிடம் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந்தார் ஜாப்ஸ்.
இதற்கொரு காரணம் இருந்தது. ஜாப்ஸ் ஆப்பிளில் இல்லாதபோது ஏகப்பட்ட மாடல்கள் வந்திருந்தன. மேக்கிண்டோஸ் கம்ப்யூட்டர்கள்தான். ஆனால் அதிலேயே பல்வேறு மாடல்கள். ஒவ்வொன்றுக்கும் ஓர் எண். ஆயிரத்து நானூறிலிருந்து ஒன்பதாயிரத்து அறுநூறு வரை.
இத்தனை மாடல்கள் எதற்கு? ஒரு சராசரிப் பயனாளரால் இவற்றையெல்லாம் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? எனவே, தேவையற்ற அனைத்து மாடல்களையும் கைவிடுவதே சிறந்த வழி.
ஜாப்ஸின் யோசனை விபரீதமானது என்று அங்கிருந்த சிலருக்குத் தோன்றியது. தங்களது கருத்துகளைச் சொல்லவும் செய்தனர். ஆனால் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் எளிமையாக விளக்கினார். அங்கிருந்த மார்க்கர் ஒன்றைக் கையில் எடுத்தார். ஒயிட் போர்டில் எழுதத் தொடங்கினார்.














Add Comment