லண்டனில் வசித்து வரும் இந்தியரான பிரேமா வாங்ஜோம், விடுமுறைக்காக. ஜப்பான் செல்லத் திட்டமிட்டிருந்தார். நவம்பர் 21, 2025 அன்று அவர் இணைப்பு விமானத்தில் ஏற ஷாங்காய் விமான நிலையம் வந்தடைந்தபோது பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டார். சீனக் குடியேற்ற அதிகாரிகள் அவரது இந்திய பாஸ்போர்ட்டைப் பறிமுதல் செய்தனர். ‘இந்த பாஸ்போர்ட் செல்லாது’ என்று அறிவித்தனர்.
பிரேமாவின் பாஸ்போர்டில் பிறந்த இடம் அருணாச்சல பிரதேசம் இந்தியா என்றிருந்தது. சாங்னான் (Zangnan) (அருணாச்சல பிரதேசத்தைச் சீனர்கள் குறிப்பிடும் பெயர்) சீனாவில் உள்ளது. நீங்கள் ஒரு சீனப் பெண். சீன பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று கேலி செய்தனர். பிரேமா உடனடியாக ஷாங்காயிலுள்ள இந்தியத் தூதரகத்தை அணுகினார். இந்தியத் தூதரக அதிகாரிகள் வந்ததும் நிலைமை சரிசெய்யப்பட்டது. இச்சம்பவத்தால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக பிரேமா தெரிவித்துள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சாங்னான் (Zangnan) சீனாவுக்குச் சொந்தமானது. இந்தியா அதைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துவிட்டு சொந்தம் கொண்டாடுவது சரியல்ல. சீனா இதை ஒருபோதும் அங்கீகரிக்காது என்றது.















Add Comment