இவ்வருடம் எனக்கு ஒரு பம்ப்பர் ஆண்டு. ஒருவழியாகத் தொடர்ச்சியாக எழுதுமளவுக்கு முன்னேறியிருக்கிறேன். ஆசிரியர் பாரா இல்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்காது.
கல்லூரி நாட்களிலிருந்து தொடர்ச்சியாக வாசித்தாலும், பெரிதாக எதுவும் எழுதவில்லை. அவ்வப்போது வீறு கொண்டெழுந்து பிளாகில் எழுதுவேன். அதுவும் வருடம் ஒன்று அல்லது இரண்டு கட்டுரை என்கிற கணக்குதான். தொடர்ச்சியாக எழுத முடியாதது குறித்து வருத்தமும் அடைவேன். என் சோம்பல்தான் காரணம் என்று தெரிந்தாலும், அதைக் கடந்து செல்ல முடியவில்லை.
அப்படிச் சோர்ந்திருந்தபோதுதான் பாராவின் எழுத்து வகுப்பைப் பற்றி அவரது பதிவைக் கண்டேன். உடனே வகுப்பில் இணைவதற்குப் பதிவு செய்தேன்.
புனைவு, அல்புனைவு என இருவகை எழுத்துகளின் பல நுட்பங்களை பாரா கற்றுத் தந்தார். ஒரு நாளுக்கு இரண்டு மணிநேரம் வீதம் எட்டு வகுப்புகள். ஆனாலும் அனைத்து நாட்களுமே மூன்று மணிநேரம் கடந்துவிடும். மாணவர்களுக்குத் தன்னால் இயன்ற அனைத்து நுட்பங்களையும் சொல்லிவிட வேண்டுமென்ற ஆசிரியரின் எண்ணத்தை இதில் உணரலாம்.















Add Comment