ஒரு திட்டம் அல்லது கணக்கு தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போட்டு அதைத் தொடங்குவது வழக்கம். தமிழக அரசியலைப் பொறுத்த வரை கடந்த அறுபது ஆண்டுகளாக நடந்த தேர்தல்களில் திமுக, அ.இ.அ.தி.மு.க, காங்கிரஸ், மற்றும் கம்யூனிஸ்ட் என எந்தக் கட்சியாகட்டும் அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு இந்தத் திட்டத்தைத் தேர்தல் அறிக்கைகளில் எழுதி வந்தார்கள். ஆட்சி உள்ளவரை இது தொடர்பான போராட்டங்களும் பேச்சு வார்த்தைகளும் தொடர்ந்து நடக்கும். திட்டத்தைத் தவிர. பேச்சு வார்த்தைகள், திட்டத்திற்கான விதை போடப்பட்டுப் பொன்விழா கடந்தாலும் நடைமுறைக்கு வராத திட்டம் என்றால் அது அத்திக்கடவு அவிநாசி திட்டம் தான்.
தமிழக அரசியலைப் பொறுத்த வரை வாக்குறுதி வரும் முன்னே திட்டம் வரும் பின்னே என்பது எழுதப்படாத விதி. எத்தனை பின்னே என்பது அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் அந்தத் திட்டத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்குமே தெரியும்.
தமிழக விவசாயிகள் நலனுக்கான முதல் முழுமையான நீரேற்றுத் திட்டமான அத்திக்கடவு அவிநாசி திட்டம் முதல்வர் மு க ஸ்டாலினால் கடந்த வாரம் தொடங்கி வைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கடந்த 2019 இல் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தத் திட்டம் தற்போது அனைத்துப் பணிகளும் முடிவுக்கு வந்து தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விதையும், முயற்சிகளும் ஆரம்பித்தது 1952 இல் என்பது தான் ஆகப் பெரிய சோகம். காமராஜர் ஆட்சிக் காலத்தில் அவிநாசி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த மாரப்ப கவுண்டர் என்பவர் முன்னெடுப்பால் தொடங்கப்பட்ட திட்டம் இது. அவிநாசி, அன்னூர் போன்ற பகுதிகளின் கடும் வறட்சியைப் போக்குவதற்காக இந்த முன்னெடுப்பு நடந்தது.
சிறப்பு