Home » ஔரங்கசீப்: வாழ்க்கை முடியலாம்; வன்முறைக்கு முடிவில்லை
வரலாறு

ஔரங்கசீப்: வாழ்க்கை முடியலாம்; வன்முறைக்கு முடிவில்லை

‘முகலாய சாம்ராஜ்யத்தின் பேரரசர் என்று அறியப்பட்ட ஒளரங்கசீப், காலத்தின் கடிகாரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற முயன்று, அதன் விளைவாக அதை நிறுத்தி பிறகு உடைத்தும் விட்டார்’ என்று நேரு கூறியிருக்கிறார். தனது மதவெறி கோட்பாடுகளாலும், இந்திய மக்களின் மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியாலும் அவர் முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தவர் என்று வரலாற்றாசிரியர்கள் பலரும் அவரை மேற்கோள் காட்டுகிறார்கள். நமது பாடப்புத்தகங்களில் தலையாய வில்லனாகக் காட்டப்பட்ட ஒரே முகலாய அரசர் ஔரங்கசீப்தான். உண்மையிலேயே ஔரங்கசீப் கொடுங்கோலரா? ஏன் அவரது சமாதி ஓர் எளிய கல்லறையாக இருக்கிறது? ஏன் இப்போது அவர் கல்லறையை அகற்ற வேண்டும் என்று மகாராஷ்டிராவில் போராட்டம் நடக்கிறது? ஏன் இத்தனை வெறுப்பு அவர் மீது?

தாஜ்மஹால் புகழ் ஷாஜஹான் – மும்தாஜ் மஹாலின் மூன்றாவது குழந்தை முஹி-அல்-தீன் –முஹம்மத். முதலாம் ஆலம்கீர் என்று அழைக்கப்பட்டு வரலாற்றில் ஔரங்கசீப் என்றே வழங்கப்பட்ட முகலாய மன்னர். அப்போதைய முகலாயப் பேர’ரசர் ஜஹாங்கீரின் பேரன். அவரது கண்காணிப்பில், தாரோ ஷிகோவ் என்கிற தனது அண்ணனுடன், லாகூரில் வளர்ந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!