சமீபத்தில் நடந்த பன்னிரண்டு நாள் இரான் இஸ்ரேல் யுத்தத்தில் அதிகம் பேசப்பட்ட பெயர் அயொதுல்லா அல் கமெய்னி. இவரைக் கொன்றொழித்தால் மொத்தப் பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொந்தளிக்கும் அளவு முக்கியமானவர். இரானின் உச்சத் தலைவர் என்ற பட்டத்தைத் தாங்கி நிற்கும் இவர் யார்? இந்தப் பதவிக்கான அதிகாரங்கள் என்னென்ன? இவரைக் கொல்ல இஸ்ரேல் ஏன் துடிக்கிறது?
அயொத்துல்லா என்றால் இஸ்லாத்தின் ஷியா முஸ்லிம்களின் உயரிய மதகுரு என்று பொருள். 1979ஆம் ஆண்டு இரானில் மன்னராட்சிக்கு எதிராக வெடித்த புரட்சியைத் தலைமை தாங்கி நடத்தியவர் ருஹொல்லா கொமெய்னி என்னும் ஷியா மதகுரு. அப்போதைய மன்னரான ஷா, மேற்குலக நாடுகளுடன் நெருங்கிய நட்பு பாராட்டியதை வெறுத்தவர். குறிப்பாக, மன்னர் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் கைப்பாவையாக மாறிவிட்டார் என்று குற்றஞ்சாட்டியே அந்தப் போராட்டங்களை நடத்தினார். மன்னராட்சி கவிழ்ந்து, ஷா நாட்டை விட்டுத் தப்பியோடிய பிறகு அயொத்துல்லா கொமெய்னி இரானின் உச்சத் தலைவராகப் பதவியேற்றார்.
கொமெய்னியின் நேரடி மாணவரான அலி ஹொசைனி கமெய்னி, 1979 இரான் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்தவர். முதல் அயொதுல்லாவின் முழுமையான நம்பிக்கையைப் பெற்ற தளபதியாக இருந்தவர். அதனால்தான் இரான் இஸ்லாமியக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அதன் புகழ்பெற்ற புரட்சிகர காவல் படைக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். இருமுறை இரானின் அதிபராகப் பதவி வகித்தார். ஒருமுறை பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டு நிராகரிக்கப்பட்டார்.















சிறப்பு. வாழ்த்துகள்.
சிறு குறிப்பு:
ஆயத்துல்லா என்றால் இறைவனின் சான்றாய் இருப்பவர் என்பது பொருள்.
மஜ்லி அல்ல, மஜ்லிஸ். மஜ்லிஸ் என்றால் அவை / சபை.