அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள…. குறிப்பாக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தொடர் போராட்டங்களையும் மாணவர் எழுச்சியையும், ஒரு தாக்குதலும் அதைத் தொடர்ந்த இஸ்ரேலின் போரும் தோற்றுவிக்கும் என்று ஹமாசோ, இந்த அளவு ஆதரவு பெருகும் என பாலஸ்தீனமோ எதிர்பார்த்திருக்காது.
சமூக ஊடகங்களில் நேரடியாகக் காணும் காணொளிகளின் போர்க்கால அவலங்கள் முதல் காரணம். ஆனால் இந்த ஒழுங்குமுறைக்குப் பின்னால் வேறு என்ன காரணங்கள்? இஸ்ரேலில், அல்லது இஸ்ரேலுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களில் நிதி ஒதுக்கீடு செய்யாதீர்கள் என்ற ஒருமித்த குரலுக்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று ஆராய்ந்து பார்த்ததில் பல காரணங்கள் தெரிய வந்திருக்கின்றன.
போராட்டங்கள் அமைதியைக் குலைக்கின்றன. அப்படிப் பார்த்தால் சஃப்ரஜிஸ்ட் போராட்டங்கள், சிவில் உரிமைப் போராட்டம், காந்தியின் கடற்கரை நோக்கிய பேரணிகூட அப்போதைய சட்டத்திற்குப் புறம்பானதுதான். எது சரியானது எது தவறானது என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.
Add Comment