ஐக்கிய அமெரிக்கக் குடியரசு அதிபர் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதிபர் பைடன், இஸ்ரேல் காஸா போர் குறித்து எடுக்கும் முடிவுகள் அவரின் வருங்காலத் தேர்தலின் வெற்றியைப் பாதிக்கலாம்.
அமெரிக்காவில் வாழும் யூதர்களின் மக்கள் தொகை, அதிலும் தேர்தலுக்கு நன்கொடை அளிக்கும் யூதர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சமீபகாலத்தில் அதிபர் பைடனின் இஸ்ரேல் ஆதரவு அவரது வெற்றியைக் குறைப்பது போலப் பல இளைஞர்களின் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாகப் பல்கலைக் கழகங்களில் படிக்கிற மாணவர்களின் குரல்கள். ஆனால், இவர்களுக்கு அமெரிக்காவில் வாக்குரிமை இருக்கிறதா இல்லை இவர்கள், சர்வதேச மாணவர்கள் விசாவில் இங்கே வந்து படிப்பவர்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திப் பல வாரங்கள் கடந்து விட்டன. நான்கு நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் சில பணயக்கைதிகள் விடுவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு கூடிக் கிடக்கிறது. இந்தக் கட்டுரையை எழுதும் போது 13 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட செய்தி வந்திருக்கிறது.
Add Comment