முதுமை அடைவதன் அடையாளங்களில் ஒன்று கேட்கும் திறன் குறைந்து போவது. அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் அவருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்ளும் உறவுகளே அதிகம். இது சமூக, குடும்ப உறவுகளை நீக்கித் தனிமைப்படுத்துகிறது. பேசுவது குறைந்து, மன அழுத்தம் போன்ற பல மன நோய்களுக்கும் மறதி நோய்களுக்கும் காரணமாகிறது. சொற்கள் தொலைந்து போகின்றன.
ஐம்புலன்களில் கேட்கும் திறன் மிக முக்கியமான ஒன்று. காது கேட்கும் கருவிகள் வந்துவிட்டாலும் அவற்றால் பல உப தொல்லைகளும் உண்டு எனப் பயன்படுத்துவோர் தெரிவிக்கிறார்கள்.
காது கேட்கும் கருவிகள் அதிக விலையுடையவை. அடிக்கடி மாற்றும் தேவை உள்ளவை. ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாட்டில் இவற்றை நினைத்தும் பார்க்க இயலாது. இதற்கு மிகக் குறைந்த செலவில், இயற்கையாகவே கேட்கும் திறனை ஏற்படுத்தினால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? முதியோருக்கு மட்டும் அன்றி பிறவியிலேயே காது கேளாத சிறிய குழந்தைகளுக்கும்?
Add Comment