Home » பாம்பு மனிதன்
மருத்துவ அறிவியல்

பாம்பு மனிதன்

டிம் ஃபிரிடீ

சமூக வலைத்தள ரீல்களிலும் யூட்யூப் விடியோக்களிலும் நீங்கள் டிம் ஃபிரிடீயைப் (Tim Friede) பார்த்திருக்கலாம். ஊர் உலகத்தில் உள்ள அனைத்து விதமான பாம்புகளையும் தன்மீது கொத்த விட்டு வேடிக்கை காட்டுவார். கண்கட்டல்ல. உண்மையிலேயே கொடிய விஷமுள்ள பாம்புகள் அவரைக் கொத்துகின்றன.  இருப்பினும் தனக்கு எதுவும் ஆவதில்லை என்று குருதி சொட்டும் காயங்களைக் காட்டியபடியே கெத்தாகப் பேசுகின்றார். இது எப்படி சாத்தியம்?

எவ்வகையான பாம்பின் நஞ்சையும் முறியடிக்கும் வியத்தகு ஆற்றலை அவரது உடல் கொண்டுள்ளதே அதற்குக் காரணம்.

டிம் ஃபிரிடீ அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே ஊர்வன மீதும் அறிவியல் மீதும் மிகுந்த ஆர்வம் உடையவராய் இருந்துள்ளார். தன் ஆறு வயதில் முதல் பாம்பைப் பிடிக்க முயன்று முதல் கடியை வாங்கியதாகச் சொல்கிறார். அது நஞ்சில்லாப் பாம்பாக இருந்தது அவரது நல்ல நேரம். தன் இளம் பருவம் முழுக்கவே பல வகைப் பாம்புகளைப் பிடித்தும் வளர்த்தும் தன் குடும்பத்தினரை அலற விட்டதாகக் குறிப்பிடுகிறார். பிறகு தேள், சிலந்தி வகைகளைப் பிடித்து அவற்றின் நஞ்சைச் சேகரிக்கும் (milking the venom) வித்தையைக் கற்றுக்கொள்கிறார். அதன் அடுத்தக்கட்டமாக நச்சுப் பாம்புகளை வளர்க்கவும் அவற்றின் நஞ்சினைச் சேகரிக்கவும் முடிவு செய்கிறார். இதில் வேடிக்கை என்னவெனில் இவற்றை எல்லாம் அவர் பொழுது போக்கிற்காக மட்டுமே செய்து வந்துள்ளார். குடும்பத்தைக் காப்பாற்ற அவர் பல்வேறு வேலைகளைச் செய்துள்ளார்.

டிம் ஃபிரிடீ கல்லூரிக்குச் சென்றதில்லை. பாம்புகள் பற்றிய பட்டறிவைப் புத்தகங்கள் உதவி கொண்டே பெற்றார். பாம்புக்கடிக்கு பல உயிர்கள், குறிப்பாக வளரும் நாடுகளில் ஏழைகள், பாதிக்கப்படுவதும் பலியாவதும் அவரை மிகவும் வருத்தமடையச் செய்தது. நஞ்சுப் பாம்புக்கடி மருத்துவத்தில் உயிர் காக்கும் ஒரே தீர்வு antivenom எனப்படும் ‘நஞ்சுமுறிப்பான்’ மருந்து மட்டுமே.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!