Home » விதி மீறலே வீரம்?
உலகம்

விதி மீறலே வீரம்?

அமெரிக்கா குடியேறிகளின் நாடு. அவர்கள் மூலமாக எல்லா மொழிகளும் கலாசாரமும் இங்கே பரவியிருக்கின்றன. சில கலாசாரங்கள் சல்லிவேராகவும், சில ஆணிவேராகவும் ஊடுருவியிருக்கின்றன. மற்ற கலாசாரங்கள் வேரூன்றிப் படர்ந்து மரமாகி வளர்ந்திருக்கும்போது ஏற்பட்ட சலசலப்புகளே இன்னும் அடங்கவில்லை. இவற்றிலிருந்து இந்தியக் கலாசாரம் முற்றிலும் மாறுபட்டது.

என்னதான் நாம் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று சொன்னாலும், நமக்குள்ளேயே பலவிதமான கலாசாரங்கள் இருக்கின்றன. குச்சுப்புடியும், பரதநாட்டியமும், மணிப்புரியும், கதக்கும், கதகளியும் வேறுவேறு. இசை கூட கஜல், கர்நாடகம், இந்துஸ்தானி எனப் பல ரகம்.

இந்தியாவில் ராசலீலா கொண்டாடுகிறார்களோ இல்லையோ, இங்கே ஒவ்வொரு வார இறுதியும் களை கட்டும். நவராத்திரி கொலுவா, நவகாளி உற்சவமா, கொண்டாடியோ தீருவோம். நமது மதமும் கடவுளரும் மட்டும் குறைச்சலா என்ன? அமெரிக்க அரசியலமைப்பில் மதச் சுதந்தரம் உண்டு. அதனால் மக்களும் கூடிய வரையில் பிற மதங்களைப் பேணுபவர்களை மதித்தே நடக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!