Home » எனதன்பே எருமை மாடே – 12
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே எருமை மாடே – 12

12. வெற்றியும் தோல்வியும்

நீண்ட நாட்களுக்கு முன்னர் இணையத்தில் ஒரு படம் பகிரப்பட்டது. அந்தப் படத்தில் மூன்று சிறுவர்கள் இருந்தனர். பள்ளிக்கூடத்து விளையாட்டு மைதானத்தில் போட்டியில் பரிசு கொடுக்கும் மேடை. அதில் நடுவில் முதலாம் இடத்துத் தளத்தில் நிற்கும் சிறுவன் புன்முறுவலுடன் மகிழ்ச்சியுடன் நின்றான். இரண்டாம் இடத்தைப் பெற்றவருக்கான இடத்தில் நிற்கும் சிறுவன் கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு தலையைச் சற்றுக் குனிந்த படி சோகத்தில் நின்றான். மூன்றாம் இடத்திற்கான தளத்தில் நிற்கும் சிறுவன் இரண்டு கைகளையும் மேலே உயர்த்திக் கொண்டு வாயெல்லாம் பல்லாக அதீத மகிழ்ச்சி உணர்வை வெளிப்படுத்திக் கொண்டு நின்றான். ஏதோ ஒரு போட்டியில் வென்று பரிசு பெறப் போகும் மூவரில் அதிக மகிழ்ச்சியும் அத்தருணத்தைக் கொண்டாடுவதும் அவன் முகத்திலும் உடல் மொழியிலும் தெளிவாகத் தெரிந்தன.

மேற்குறிப்பிட்ட போட்டி என்னவென்பதோ அச்சிறுவர்களின் பின்னணியோ நாமறியோம். ஆனாலும் பொதுவாக அந்தச் சிறுவர்களின் முகபாவனையும் உடல்மொழியும் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களின் குணாதிசயங்களை நன்கு பிரதிபலிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். முதலாம் இடத்தில் நிற்பவன் வென்றுவிட்டேன், அப்பாடா நிம்மதி என்பது போன்ற மகிழ்ச்சியில் உள்ளான். அத்தருணத்தைக் கொண்டாடுபவனாகத் தெரியவில்லை. இரண்டாம் இடத்தில் நிற்பவன் போட்டியில் அவனடைந்த வெற்றியை விட முதலிடம் பெறவில்லையே என்பதால் தோல்வியே பெரிதாகத் தெரிந்துள்ளது. மூன்றாம் இடத்துச் சிறுவனோ நான் சாதித்து விட்டேன். முதல் இரண்டு இடங்களும் கிடைக்கவில்லை. அதனாலென்ன எனக்குக் கிடைத்த மூன்றாம் இடத்தைக் கொண்டாடுவேன் என்று சொல்லாமல் சொல்கிறான்.

வெற்றி என்பது முதலிடம் மட்டும்தானா? அப்படியாயின் ஒவ்வொரு துறையிலும் ஒருவர் மட்டுமே வெல்ல முடியும். மற்றவர்கள் சோகத்தில்தான் ஆழ வேண்டுமல்லவா?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!