4. எறும்பா? யானையா?
பொதுவாக ஓர் எறும்பு கடித்தால் என்ன நடக்கும்? அவ்விடத்தில் தோல் தடிமனாகும். தோலின் நிறம் சற்று மாறலாம். எரிச்சலூட்டும் உணர்வு வரலாம். ஓரிரு நாள்களில் தோலில் ஏற்பட்ட தடிமன், நிற மாற்றம் போன்றவை போய் விடும். எதுவானாலும் அதன் பாதிப்பு நமக்கு மிகவும் குறைவே. எறும்பு வகைகள், ஒருவரின் ஒவ்வாமைக் குணங்கள் போன்றவற்றால் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனாலும் மேற்குறிப்பிட்ட சிறு அசௌகரியமே பொதுவாக எறும்பு கடிப்பதால் ஒருவருக்கு ஏற்படுகின்ற விளைவு.
ஒரு யானை காலைத் தூக்கி ஒருவரை மிதிக்க வருகிறது. அது தன் நோக்கத்தை நிறைவேற்றினால் மிதிக்கப்படுபவர் யானையின் காலுக்கடியில் நசுங்கி உயிரிழப்பது நிச்சயமான முடிவாகும்.
வாழ்க்கையில் நாம் தினம் தோறும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். ஆனால் நாம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையின் தாக்கத்துக்கு ஏற்றவாறு நாம் அப்பிரச்சினையைச் சமாளிக்கிறோமா என்று சிந்திக்கிறோமா?
Add Comment