Home » செல்-லுபடி ஆனால் சரி!
சமூகம்

செல்-லுபடி ஆனால் சரி!

ஒவ்வொரு நாளும் செல்போனின் அட்டகாசம், குழந்தைகளின் கவனக்குறைவு, அதனால் விளையும் பிரச்சினைகள் ஆகியவை குறித்து மட்டுமே அதிகம் கேள்விப்படுகிறோம். இப்படியிருக்கையில் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு சோதனை இதில் வேறொரு கோணத்தைக் காட்டியிருக்கிறது. அவர்கள் சொன்ன கடைசிக் கருத்துதான் விவாதத்திற்குரியது. ஸ்மார்ட் போன் உபயோகத்தால் இளைய தலைமுறையினருக்கு ஆபத்து என்பதற்கான எந்தக் காரணமும் இந்த ஆய்வில் தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இது போதாதா இந்த ஆய்வை மேலும் ஆய்வு செய்வதற்கு?

“இரண்டு பெண்குழந்தைகள்… அதுவும் வளர்ந்த, வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கும் வீடு எப்படி கலகலவென்று இருக்க வேண்டும்..? கணவருக்குக் கணினிப் பிரிவில் உத்தியோகம். எனக்கு அலுவலக மேலாண்மை. நான்கு நபர்கள் கொண்ட எங்கள் வீட்டில் ஆறு செல்போன்கள் உள்ளன. கணவருக்கு இரண்டு. வீட்டிற்கு என்று ஒன்று தனியாக. என் கணவரின் பேச்சு சத்தத்தையும் எனது கத்தலையும் தவிர வேறு சத்தமே வராது. அவர் போன் பேசுவதை நிறுத்தி விட்டால் வீடும் அமைதியாகி விடும். பெண்கள் இருவரும் அவரவர் அறைகளில் மொபைலோடு இரண்டறக் கலந்திருப்பார்கள். நாங்கள் பேசுவதோ அழைப்பதோ எதுவும் அவர்கள் காதுகளிலேயே விழாது. இத்தனைக்கும் ஒருத்தி பத்தாவதுதான் படிக்கிறாள். பெரியவள் கல்லூரி முதலாமாண்டு. அவர்கள் படிப்பிற்கென்று மட்டுமே வாங்கித் தந்த அந்தப் போன் இப்போது படிப்பிற்கும் பயன்படுகிறது. மற்ற நேரங்களில் கடவுளுக்கே வெளிச்சம்” என்கிறார் சரண்யா.

“இளம்பருவத்தினர் மட்டுமல்ல சிறுவர் சிறுமியர் கூடப் போன் வைத்துக் கொள்ளலாம். தவறில்லை. இன்று நாடு இருக்கும் சூழலில் அவர்களைக் கண்காணிக்க, அவர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள, பாட சம்பந்தமாகப் பெற்றோர்களின் பாரங்களைக் குறைக்கச் செல்போனும் இண்டர்நெட்டும் மிகவும் உதவியாகத்தான் இருக்கிறது. இதைத் தரமாட்டேன் என்று சொல்லி அவர்களை மன அழுத்தங்களுக்கு உள்ளாக்குவதைவிட அதை எப்படிச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்களுக்கு முதலிலிருந்தே கற்றுத் தந்து விட வேண்டும். எந்தவொரு தொழில்நுட்ப வளர்ச்சியிலும் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. எதற்கு நாம் அதிகம் தீனி போடுகிறோம் என்று கவனிப்பதில்தான் நம் பாதுகாப்பு இருக்கிறது” என்கிறார் சரஸ்வதி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!