ஸ்மார்ட் ஃபோன்களும் மனிதர்களைப் போன்றவைதான். பெர்ஃபெக்ட் என்று ஒன்று கிடையாது. எல்லா ஸ்மார்ட் ஃபோனிலும் ஏதாவது ஒரு குறைபாடு நிச்சயம் இருக்கும். நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்று மட்டும் பார்த்தால் போதும்.
ஸ்மார்ட் ஃபோன் பயன்பாடு உலகெங்கிலும் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளது. சில இடங்களில் அரசுகளே ஸ்மார்ட் ஃபோன்கள் வழங்கும் திட்டத்தையெல்லாம் செயல்படுத்தி வருகின்றன.
ஸ்மார்ட் ஃபோன்கள் எவ்வாறு இவ்வளவு முக்கியத்துவம் பெற்றன? இன்றையச் சூழலில் நாம் பல்வேறு சேவைகளை இணையத்திலிருந்து பெறுகிறோம். இணையத்தை அணுக ஸ்மார்ட் ஃபோன்கள் மிகவும் ஏதுவாக உள்ளன. எங்கும், எப்போதும் நம்முடனேயே இருக்கும் கருவி என்பதால் இது மிகவும் வசதியாக உள்ளது.
Add Comment