சென்னை கிழக்குக் கடற்கரைச்சாலையில் கோவளத்தை அடுத்த திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா ஜனவரி 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடந்தன. பல நாடுகளிலுமிருந்து வந்திருந்த கலைஞர்கள் இந்தத் திருவிழாவில் கலந்துகொண்டனர். பிரான்ஸ், ஆஸ்திரியா, ஜப்பான், பிரேசில், பெல்ஜியம் ஆகிய இருபது நாடுகளைச் சேர்ந்த பைலட்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசனும் ராஜேந்திரனும் ஜனவரி 10ஆம் தேதி வானில் வலம் வந்தபடி தொடங்கிவைத்தனர். பொதுமக்களுக்காக மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை இந்தக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சகம் ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு மேலும் அழகூட்டிய நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். நடப்பது என்ன என்ற கேள்வியோடுதான் நாம் இந்த நிகழ்வை அணுகினோம்.
இந்தக் கண்காட்சிக்கு உள்ளே செல்ல வேண்டுமானால் பெரியவர்களுக்கு இருநூறு ரூபாய் கட்டணம். குழந்தைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை என்றபோதே சுதாரித்து இருக்க வேண்டும். மணிக்கட்டில் ஒரு கயிறைக்கட்டிக் கொண்டு உள்ளே சென்றவர்களுக்கு அது தாங்கள் கைது செய்யப்பட்டதற்கான சாட்சி எனத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Add Comment