Home » சென்னைப் புத்தகக் காட்சி 2026 – நேரடி ரிப்போர்ட் 1
புத்தகக் காட்சி

சென்னைப் புத்தகக் காட்சி 2026 – நேரடி ரிப்போர்ட் 1

49ஆவது சென்னைப் புத்தகக் காட்சி நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஜனவரி எட்டாம் தேதி மாலை முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்தப் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தார். ஜனவரி 21ஆம் தேதி வரை இந்தப் புத்தகக் காட்சி நடைபெறும். புத்தகக் காட்சிக்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகத் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து கலைஞர் பொற்கிழி விருதுகளை வழங்கினார் முதல்வர். நா. சுகுமாரன், ஆதவன் தீட்சண்யா, இரா. முருகன், பாரதிபுத்திரன், கருணா பிரசாத், வ. கீதா ஆகியோர் இந்த வருடத்துக்கான விருதுகளைப் பெற்றனர்.

தன்னைச் சந்திக்க வருபவர்கள் இதுவரை அளித்த நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் பல்வேறு நூலகங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தகவலை முதல்வர் பகிர்ந்துகொண்டார்.

தமிழகத்தில் நடைபெறும் பிற புத்தகக் கண்காட்சிகளை விடச் சென்னைப் புத்தகக் கண்காட்சி சிறப்பு வாய்ந்தது. எழுத்து வழியாக மட்டுமே வருடம் முழுவதும் பேசிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்திக்கும் இந்த வாய்ப்பினை இருதரப்பினரும் தவறவிடுவதில்லை. சென்னையைத் தவிரப் பிற ஊர்களிலிருந்தும் இந்தப் புத்தகக் காட்சிக்கென புறப்பட்டு வரும் எழுத்தாளர்களும் வாசகர்களும் ஏராளம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!