Home » ஜில்லென்று ஒரு சென்னை
தமிழ்நாடு

ஜில்லென்று ஒரு சென்னை

ஜனவரி முடிந்து விட்டது. சென்னைக்குக் குளிர்காலம் இன்னும் முடியவில்லை.

மண்டையைப் பிளக்கும் வெயில். மழைக்காலத்தில் சாலையெங்கும் வெள்ளம். இவையெல்லாம் நமக்குப் பழக்கமானவை. குளிர்காலம் பெயருக்கு வரும், வந்த தடம் தெரியாமல் சென்றுவிடும். ஆனால் இந்த வருடம் அப்படியில்லை.

வாடைக்காற்று வெடவெடவென உடலை நடுங்கச் செய்கிறது. தரையின் சில்லிப்பு ஊசிபோலப் பாதங்களைத் துளைக்கிறது. ஐஸ் பாறையைக் கலந்துவிட்டது போல் தண்ணீர் ஜில்லிடுகிறது. இடையிடையே தூறல் மழை வேறு குளிரை ஏற்றி விடுகிறது. மொத்தத்தில் ஒரு பெரு மலைவாசஸ்தலமாக மாறிவிட்டது சென்னை.

சென்னையில் மொத்தம் மூன்று பருவங்கள்தான். சூடு, தீவிரச் சூடு, அதிதீவிரச் சூடு. புழுக்கமும் சூடும் சென்னையின் தவிர்க்கவே முடியாத அடையாளங்கள். ஜனவரி மாதத்தில் வழக்கமாகப் பகல்நேர வெப்பநிலை முப்பது டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இரவில் குறைந்தபட்சமாக இருபத்தொன்று. இவ்வளவுதான் சென்னையின் குளிர்காலம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!