Home » என்னதான் நடக்கிறது சென்னையில்?
குற்றம்

என்னதான் நடக்கிறது சென்னையில்?

நம்பியோ (Numbeo) என்னும் தரவுத்தளம் இந்தியாவின் பத்து பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பயனர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலான இக்கணக்கெடுப்புப் பட்டியலில் சென்னை எட்டாவது இடத்தில் உள்ளது.

ஆனால் அரசு தரப்பைச் சார்ந்த NCRB (National Crime Records Bureau) வெளியிட்ட இந்தியாவின் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை நகரம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. அப்படியெனில் சென்னையின் உண்மையான பாதுகாப்பு நிலவரம் என்ன? பார்க்கலாம்.

முதலாவது சம்பவம். ஜூலை 5, 2024. சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோவில் தெருவிலுள்ள அந்த வீட்டுமனையில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மனையின் உரிமையாளரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவருமான ஆம்ஸ்ட்ராங் கட்டுமான வேலைகளை மேற்பார்வையிட வந்திருந்தார். இரவு ஏழு மணியளவில் எட்டுப் பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனங்களில் வந்திறங்கினர். ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளாலும் கத்தியாலும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!