Home » சிம்பான்ஸிகளின் அன்புத் தாய்
ஆளுமை

சிம்பான்ஸிகளின் அன்புத் தாய்

ஜேன் குடால்

அவளுக்கு அப்போது ஐந்து வயது. திடீரென ஒருநாள் தொலைந்து போனாள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. குடும்பத்தினர் பெரும் பதற்றம் அடைந்தனர். வீட்டின் பின்புறம் கோழி வளர்ப்புக் கொட்டகை ஒன்று இருந்தது. அதிலிருந்த இருட்டறையில் தேட வேண்டுமென ஒருவருக்கும் தோன்றவில்லை.

கோழிக் கொட்டகையின் இருட்டறையில்தான் அச்சிறுமி அசைவின்றி அமைதியாய் பல மணிநேரம் ஒளிந்து கொண்டிருந்தாள். எதற்காக? கோழி ஒன்று முட்டையிடும் நிகழ்வை நேரடியாகக் காண்பதற்காக! அதை முழுதும் கண்டுகளித்த பின்பு அங்கிருந்து குதூகலத்துடன் வெளியேறினாள்.

அச்சிறுவயதில் அவளிடம் இருந்த அசாத்தியப் பொறுமையும் அவதானிப்புத் திறனும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இயற்கை மீதும், கானுயிர்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அந்தச் சிறுமிதான் 1934ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்த ஜேன் குடால் (Jane Goodall). உலகப் புகழ்பெற்ற சிம்பான்ஸி ஆய்வாளராகவும், இயற்கைச் சூழல் செயல்பாட்டாளராகவும் ஓய்வறியாமல் உழைத்தவர் ஜேன் குடால்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!