Home » ஸ்டார்லிங்க் கொலையாளி!
உலகம்

ஸ்டார்லிங்க் கொலையாளி!

ஆயுதக் குறைப்புக் கூட்டாலோசனை அமைப்பு (Conference on Disarmament) என்பது ஐநா சபையின் ஓர் அங்கம். இது சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரத்திலிருந்து இயங்குகிறது. உலகில் ஆயுதப் பரவலைக் குறைப்பதே இதன் நோக்கம். இன்று அமலில் இருக்கும் அணு, உயிரியல், நச்சு மற்றும் வேதி ஆயுதங்களின் தடை ஒப்பந்தங்கள் இவ்வமைப்பின் மூலமாகவே செயல்பாட்டுக்கு வந்தன. CTBT எனப்படும் விரிவான அணு ஆயுதச் சோதனைத் தடை ஒப்பந்தமும் அவ்வாறே.

அண்மையில் இந்த அமைப்பின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் சீனா பற்றிய தகவல் ஒன்றைப் பகிரங்கமாக வெளியிட்டது அமெரிக்கா. சீனா ரகசியமாக ஓர் அணு ஆயுதச் சோதனையை 2020ஆம் ஆண்டு நிகழ்த்தியது என்பதே அது. இன்னும் பல அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொள்ளும் திட்டத்தில் சீனா இருப்பதாகவும் அமெரிக்கா கூறியது. இவை அமெரிக்க உளவுத்துறையால் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் என்றும் தெரிவித்தது.

அமெரிக்கா கூறியுள்ளதைச் சீனா மறுத்துள்ளது. அணு ஆயுதச் சோதனைகளை மீண்டும் தொடங்க அமெரிக்கா ஆயத்தமாகிறது, அதை நியாயப்படுத்தவே இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்புகிறது என்பது சீனாவின் குற்றச்சாட்டு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!