‘குலுக்கி’ என்ற பெயரை முதலில் கேட்டபோது அது ஒரு மலையாளத் திரைப்படப் பெயராக இருக்கவேண்டும் என்று எண்ணியது என் வயதுக்கோளாறாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் அது திரைப்படமல்ல, கேரள தேசத்தில் உருவான ஒரு பானம் என்று தெரிந்துகொண்டபோது ஆச்சர்யம் சற்று விலகியது.
உணவுக்குக் காரண ஆகுபெயர் வைப்பவர்களில் முதன்மையானவர்கள் கேரளத்தவர். ஏற்கெனவே முட்டையை உடைத்து ஒரு டம்ளரில் ஊற்றி, மிளகு, பச்சைமிளகாய், கொத்துமல்லியைச் சேர்த்துக் கலக்கி தோசைக்கல்லில் போட்டு எடுக்கும் ஆம்லெட்டுக்கு ‘கலக்கி’ என்றே பெயர் வைத்து விற்பனை செய்பவர்களல்லவா? ஆகவே குலுக்கி என்பதும் கோழியோ, அதன் இனம் சார்ந்த ஏதோ ஒன்றிலோ செய்யப்படும் வஸ்து என்றுதான் நினைத்திருந்தேன்.
கிழக்காலே போனால் கொச்சி, மேற்காலே வந்தால் எர்ணாகுளம் என்று ஒரே ஊருக்கு இரண்டு பெயர் வைத்து அழைத்துக்கொண்டிருக்கும் அந்த நகரை உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ‘கஜா கா தோஸ்த்’ பாண்டியராஜனையும் எஸ்வி சேகரையும் துபாய் என்று ஏமாற்றி அனுப்பிவைப்பாரே? அல்லது கொச்சின் மாடப்புறா என்கிற தேவா பாடல் மூலமாக?















Add Comment