புத்த மதத் தலைவர் தலாய்லாமா தனது 90ஆவது பிறந்த நாளை முன்னிட்டு முக்கியமான ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தனது மறைவுக்குப் பிறகும் தலாய்லாமா மரபு தொடரும் என்றும், அடுத்த தலாய்லாமாவைத் தனது காடன் போட்ராங் அறக்கட்டளை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். சீன அரசின் ஒப்புதலின்றிப் புதிய தலாய்லாமாவை நியமிக்க முடியாது என்று சீனா அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
1578ஆம் ஆண்டு மங்கோலிய மன்னர் அல்டான் கான், திபெத்தியப் பௌத்தத்தின் சக்திவாய்ந்த கெலுக் பள்ளியுடன் கூட்டணி அமைக்க விரும்பினார். மங்கோலிய டூமெட் பழங்குடியினரைப் புத்த மதத்தின் கீழ் ஒன்றிணைப்பதே அவருடைய திட்டம். சோனம் கியாட்சோ என்னும் புத்த ஆசிரியர் திபெத்தில் செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். தலாய் (‘பெருங்கடல்’) என்கிற மங்கோலியப் பட்டத்தை சோனம் கியாட்சோவுக்கு அல்டான் கான் சூட்டினார். லாமா என்பதற்குத் திபெத்திய மொழியில் குரு என்று பொருள். அன்றிலிருந்து சோனம் கியாட்சோ மூன்றாம் தலாய்லாமா என்று அழைக்கப்பட்டார். முதல் இரு பட்டங்கள் காலஞ்சென்ற அவரது முன்னோடிகளுக்கு வழங்கப்பட்டன.
திபெத்தில் புத்த மத அடித்தளத்தைக் கட்டியெழுப்பியதில் முதல் நான்கு தலாய்லாமாக்கள் பெரும் பங்கு வகித்தனர். ஐந்தாம் தலாய்லாமா (17ஆம் நூற்றாண்டு) திபெத்தில் முதல் புத்த மடாலயத்தை நிறுவினார். புத்த மதத்தை அரசியல் அதிகாரமாக நிறுவியதில் முக்கிய பங்கு வகித்தார். மங்கோலியர்கள் மத்தியில் இருந்த அவரது செல்வாக்கு ஆசிய அரசியலில் திபெத்தை முன்னிலைப்படுத்தியது.














Add Comment