ஏப்ரல் 19-ல் தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஜூன் 4-ஆம் தேதி இந்தியாவை ஆளப்போகும் ஆட்சியாளர்கள் யார் எனத் தெரிந்து விடும். தமிழ்நாடு தொடங்கி வடக்கு, வடகிழக்கு எல்லை வரை பா.ஜ.க. வெற்றி பெற தங்களால் இயன்ற அனைத்துத் தந்திரங்களையும் செய்கிறது. எதிர்த்து நிற்க வேண்டிய காங்கிரசும் இண்டியா கூட்டணியும் போட்டிக்கு முன்பே தோல்விக்கு ஒப்புக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய ஒவ்வொரு செயலும் நம்மை அப்படித்தான் புரிந்து கொள்ளச் செய்கின்றன.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களை நியமிக்கும் வல்லமை படைத்த ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க., அவர்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தலைமை ஆணையர் ஒருவர், ஆணையர்கள் இருவர் என மூன்று முக்கியமான பதவிகளைக் கொண்ட இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இப்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பவர் ராஜீவ் குமார் மட்டுமே. அனூப் சந்திர பாண்டே பிப்ரவரி 15ஆம் தேதி ஓய்வு பெற்றுவிட மற்றொரு ஆணையர் அருண் கோயல் மார்ச் 9ஆம் தேதி சுப முகூர்த்த வேளையில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
Add Comment