காஷ்மீரத்தின் தலைநகரான ஶ்ரீநகரில் அரசு நடத்தும் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் ஒன்ற செயல்படுகிறது. அங்கே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வரிசையில் நிற்கிறார்கள். காஷ்மீர் மொத்தத்திற்கும் இரண்டு மறுவாழ்வு மையங்கள் தான் உள்ளன. அதில் பிரபலமான ஒன்று IMHANS. இங்கு மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் மருந்துகளைப் பெறுவதற்காகத் தங்கள் பெற்றோருடன் நிற்கிறார்கள் பதின்ம வயதினர்.
‘நீ மறுபடியும் ஹெராயின் எடுத்தியா?’ என்று ஒரு இளைஞனிடம் மருத்துவர் கேட்கிறார். ஏனெனில் பரிசோதனை முடிவுகள் அப்படிச் சொன்னதால். அவனும் ‘ஆம், என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று பதிலளிக்கிறான். இதுதான் இன்றைய காஷ்மீரின் நிலை. ஒப்பீட்டளவில் தீவிரவாதச் செயல்கள் குறைந்திருக்கும் இச்சமயத்தில் வாலு போய் கத்தி வந்த கதையாக இப்படியொரு பிரச்னை பூதாகாரமாக எழுந்திருக்கிறது, காஷ்மீரில்.
Add Comment