உலகத்தில் 64 நாடுகளில் தேர்தல் நடக்க இருக்கிறது. சில நாடுகளில் சமீபத்தில் ஒருவழியாக நடந்து முடிந்திருக்கிறது. மொத்த மக்கள் தொகையில் 50% மேலான மக்கள், ஐநூறு கோடி மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள்.
மக்களாட்சி அமைப்பின் சக்தியை எண்ணி மகிழ்ச்சியடையத் தோன்றுகிறதல்லவா? ஆனால், மக்கள் அதீத விருப்பத்திற்கு மாறாக சலிப்புடனேயே தேர்தலைச் சந்திக்கிறார்கள். இந்தத் தேர்தலின் முடிவுகளின் தாக்கம் இன்னும் பலகாலம் நீடிக்கும். இதில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும் இந்தியாவும் கூட தேர்தலைச் சந்திக்க இருக்கின்றன.
உண்மையில் மக்களாட்சியின் மிகப் பெரிய சக்தியான வாக்குரிமை, வாக்காளர்கள் சேர்க்கை எப்படி இருக்கிறது?
Add Comment