நம் மக்கள் சிறிது யோசித்துவிட்டுத்தான் ரசிப்பார்கள். ஆனால் ஓர் அழகு என்பது எங்கிருந்தாலும் அழகுதானே. இலங்கையின் சிங்கள, பௌத்தக் கிராமங்களுக்கென தனித்த அழகு ஒன்று இருக்கிறது. தூரத்திலிருந்து அந்தக் கிராமங்களை அண்மிக்கும் போது உங்களுக்கு முதலில் சமவெளியான வயல்வெளிகள் தெரியலாம். வயல்வெளிகளை ஊடறுத்துச் செல்கிற ஒற்றையடி நெடும்பாதைகள் இருக்கும். அவற்றில் பச்சைப் பயிர்களை ஊடறுத்துத் தெரிகின்ற வெண்மை நிற விகாரைகள், அதன் வளைவில் கிளை பரப்பி உயர்ந்து நிற்கிற அரச மரங்கள், விகாரைகளையொட்டி உருவாக்கப்படுகின்ற பிக்குகளின் தங்கிப் படிக்கிற, தங்குகிற பிரிவேனாக்கள், அதில் குட்டிச் சாதுக்கள் அவர்களது வழுவி விழுகிற துறவறத் துணியை எடுத்துச் சுருட்டித் தோளில் போட்டுக்கொண்டு விளையாடுகிற காட்சிகள், வெள்ளையுடை அணிந்து கையில் பிக்குகளுக்கான உணவுகளுடன் செல்கிற பௌத்தப் பெண்களும், ஆண்களும், இடையில் அந்தக் கிராமங்களில் மரத்தால் செய்யப்பட்டிருக்கிற சிறு பெட்டிக்கடைகள், அதில் தேநீர் அருந்தும் ஓரிரண்டு மனிதர்கள், அந்த மர வாங்குகளில் உட்கார்ந்திருக்கிற சிங்களப் பெருசுகள், தமது தோட்டத்தில் விளைகிற தேங்காய், பலா, ஈரப்பலா, பொலஸ், கீரை வகைகள், அவரை வகைகள், சில உள்ளூர் பழங்களை விற்கிற நொடிந்த பெண்களும், ஆண்களுமென, சிங்களக் கிராமங்களில் ஒரு செயற்கைத் தன்மையற்ற அழகு காணப்படும்.
இதைப் படித்தீர்களா?
1 மிதப்பு எக்மோர் ஸ்டேஷனின் பிரதான வாயில் எதிரில் சவாரியை இறக்கிவிட்டுக் கிளம்பப் பார்த்த டிரைவரிடம், இடதுகாலைத் தார் ரோட்டிலும் வலதுகாலைப் பெடலிலும்...
நடிகர் அஜித் கலந்துகொண்ட துபாய் கார் ரேஸ் குறித்து நாம் அறிவோம். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி அதே துபாயில் சரித்திர முக்கியத்துவம் கொண்ட வேறொரு சம்பவம்...
Add Comment