Home » திம்மக்கா: பசுமையின் தாய்
சுற்றுச்சூழல்

திம்மக்கா: பசுமையின் தாய்

சுற்றுச்சூழல் ஆர்வலர் திம்மக்கா தனது நூற்றுப் பதினான்காவது வயதில் காலமானார். தனது வாழ்நாளில் சுமார் எட்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களை நட்டவர் திம்மக்கா. கன்றுகளை நட்டதோடு கடமை முடிந்துவிட்டதாக எண்ணாமல் குழந்தைகள்போல அவற்றைப் பேணி வளர்த்திருக்கிறார்.

வீட்டுக் கொல்லையில் காய், கனிகளைத் தரும் மரங்களையும், வாசலில் அலங்காரச் செடிகளையும் வளர்ப்பதுதானே பொது வழக்கம்? ஊரைச் சுற்றி மரக்கன்றுகளை நட வேண்டும், அவற்றைப் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்னும் விருப்பமும் ஆர்வமும் அவருக்கு எங்கிருந்து வந்தன? அதற்கு நாம் சாலு மரதா திம்மக்காவின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கர்நாடகாவில் துமகூர் மாவட்டத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் திம்மக்கா. பள்ளி செல்லுமளவுக்கு வசதி வாய்ப்புகள் இல்லை. பத்து வயதிலேயே குவாரி வேலைக்குச் செல்லத் தொடங்கினார். பதிமூன்றாவது வயதில் சிக்கையாவை மணந்து குடூர் தாலுக்காவில் இருக்கும் ஹூலிகல் கிராமத்துக்குப் போனார். அங்கேயும் குவாரியில் கூலி வேலைதான். சிக்கைய்யாவுக்கு சொந்தமாக இருந்த இடத்தில் விவசாயமும் நடந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!