ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று (ஆகஸ்ட் 15) நிறைவடைந்திருக்கிறது. சென்னை புத்தகக் காட்சிக்கு அடுத்து மக்கள் அதிகம் வருவதும் புத்தகங்கள் அதிகம் விற்பனையாவதும் ஈரோடு புத்தகத் திருவிழாவில்தான். இதனாலேயே சில பதிப்பகங்கள் சென்னை மற்றும் ஈரோடு புத்தகக் காட்சிகளில் மட்டும் அரங்குகள் அமைக்கின்றன. விழாவினை நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவை சரியாகத் திட்டமிட்டுச் செயல்படுவதே ஈரோடு புத்தகத் திருவிழாவினுடைய இவ்வெற்றிக்குக் காரணம்.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் பதிப்பகங்களுக்கு மட்டுமே அரங்குகள் அமைக்க அனுமதியளிக்கப்படுகிறது. வேறு எந்த நிறுவனங்களுக்கும் அரங்குகள் அமைக்க அனுமதி அளிக்கப்படுவதில்லை. புத்தகத் திருவிழா நடக்கும் நாட்களில் தினமும் மாலை அறிஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பிரபலப் பேச்சாளர்களின் சிறப்புரை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்நிகழ்வுகளுக்கு ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகள், கோவை மற்றும் சேலத்திலிருந்தெல்லாம் பார்வையாளர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
ஆனால் இதெல்லாம் சென்ற ஆண்டு வரையிலான நற்சொற்கள். இம்முறை புத்தக விற்பனை அறவே இல்லை என்கிறார்கள் பதிப்பாளர்கள். என்ன ஆயிற்று ஈரோட்டுக்கு?
Add Comment