Home » அமெரிக்கத் தேர்தலும் ‘விடுதலை’ அரசியலும்!
உலகம்

அமெரிக்கத் தேர்தலும் ‘விடுதலை’ அரசியலும்!

“நான் முதல்முறை அழுதது, நான் எதிர்பாராத நேரத்தில் எனக்கு அனுப்பப்பட்ட பார்சலைப் பார்த்து. சிறைக்குள் இருக்கும் எனக்கு என்னென்ன தேவை என்று அக்கறையுடன் ஒவ்வொரு பொருளும் தேர்வு செய்யப்பட்டிருந்தன. பல் துலக்க பிரஷ், இனிப்பும் நெய்யும் கலந்த அல்வா மற்றும் சூடான காபி. இதைப் போன்ற சின்ன சின்ன சந்தோஷங்களே, ரஷ்யச் சிறைக்குள் நான் நம்பிக்கை இழக்காமல் இருக்க உதவின.”

விடுதலையானவுடன் தனது இரு மகள்களையும் கண்ணீரோடு கட்டியணைத்து முத்தமிடுகிறார், ரஷ்ய-அமெரிக்கப் பத்திரிகையாளர் அல்சு குர்மாஷேவா. தன்னை வெளிநாட்டவர் என்று பதிவு செய்யாத குற்றத்திற்காக பத்து மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டவர். பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச், கடற்படை வீரர் பால் வீலன் போன்ற ரஷ்யச் சிறையிலிருந்த பதினாறு பேரோடு விடுதலையாகி அமெரிக்கா திரும்பியிருக்கிறார் அல்சு.

அமெரிக்க, ஐரோப்பியச் சிறைகளிலிருந்தும் எட்டு பேர் விடுதலையாகி, ரஷ்யாவிற்குத் திரும்பி சென்றிருக்கின்றனர். மொத்தம் இருபத்து நான்கு கைதிகள், அமெரிக்க- ரஷ்ய பேச்சுவார்த்தைகளின் முடிவில் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். பனிப்போருக்குப் பிறகான பெரிய நிகழ்வான இதை, “ராஜதந்திர சாதனை” என்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஒன்றரை வருடங்களாக நடந்து வந்தது இந்த பேரம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்