Home » உங்கள் விமானம் எங்கே?
அறிவியல்-தொழில்நுட்பம்

உங்கள் விமானம் எங்கே?

ரயன் ஜோன்ஸ் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் இருக்கும் ஃபோர்ட் லாடெர்டெயில் விமான நிலையத்துக்கு அவரின் 88 வயது பாட்டியோடு வந்தார். வந்தவுடன்தான் தெரிந்தது அவர்கள் செல்ல வேண்டிய விமானம் ஆறு மணிநேரம் தாமதம் என்று. இத்தனை மணிநேரத் தாமதத்தை விமான நிறுவனத்தால் முன்கூட்டியே கணித்து பயணிகளுக்குத் தகவல் சொல்லியிருக்க முடியாதா, இதற்கு மாற்றாக நாம் ஒரு செயலியை உருவாக்கலாமா என்று சிந்தித்தவர், அதற்காக ட்விட்டரில் ஒரு வேண்டுகோளைப் பகிர்ந்தார்.

அவரின் கீச்சுக்குப் பதிலாக மூவர் ‘நாங்களும் உங்களோடு இந்த முயற்சியில் சேருகிறோம்’ என்றனர். இப்படி இந்த நால்வரும் சேர்ந்து 2019ஆம் ஆண்டு வெளியிட்ட செயலியின் பெயர் ஃப்ளைட்டி (flighty). இதில் ஆச்சரியம் என்னவென்றால், நால்வரும் ஒருவரை ஒருவர் அதுவரை பார்த்தது கூட கிடையாது. இருந்தும் இன்றுவரை ஒன்றாகப் பணியாற்றுகிறார்கள்.

ரயன் ஜோன்ஸ் (Ryan Jones) டெக்ஸாஸ் மாநிலம் தி வுட்லாண்ட்ஸ் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். 2003இல் ட்யூக் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் இளங்கலைப் படித்தார். அடுத்து யுனிவர்சிட்டி ஆஃப் டெக்சாஸ், ஆஸ்டினில் இயந்திரப் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். படிப்புக்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் டெவன் எனர்ஜி என்கிற எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆப்பிள் நிறுவனத்தில் செயல்பாடுகள் (Operations) துறையில் வேலை செய்தார். அப்போது அவர் நேரடியாகப் பார்த்த அந்த நிறுவனத்தின் வடிவமைப்புத் திறனும், அதில் அந்த நிறுவனம் எடுத்துக் கொண்ட கவனமும் அவரைக் கவர்ந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!