உலகின் கனிவான நீதிபதி என்று பெயர் பெற்ற பிராங்க் (பிரான்சிஸ்) காப்ரியோ அவருடைய எண்பத்தெட்டாவது வயதில் காலமானார். அவர் இறந்த செய்தி வெளியான ஐந்து மணி நேரத்தில் அதை உறுதி செய்ய இருபதாயிரம் பேர் கூகிள் ட்ரென்ட்ஸ்ஸில் தேடியுள்ளனர். அந்த அளவுக்கு மக்களிடையே நற்பெயரும் புகழும் பெற்றிருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரக் கணையப் புற்றுநோயால் அவதியுற்றிருந்த காப்ரியோவின் மரணத்தை அவரது குடும்பத்தினர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். எங்கே, எப்போது இறந்தார் என்ற விவரங்களை அவர்கள் கூறவில்லை.
கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ரோட் ஐலேண்ட் மாகாணத்தில் (Rhode Island) முனிசிபல் பிராவிடென்ஸ் நீதிபதியாகப் பணியாற்றிய பிரான்சிஸ் காப்ரியோ 2023ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். குற்றம், சட்டப் பின்னணி கொண்ட அவருடைய தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘காட் இன் பிராவிடென்ஸ் (Caught in Providence)’ அவரது வாழ்வின் பிற்பகுதியில் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. அந்நிகழ்ச்சியின் வீடியோத் துண்டுகள் அவருடைய யூடியூப் சேனலில் 800 மில்லியன் பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளன.














Add Comment