Home » ‘செல்’ எனும் சொல்
ஆளுமை

‘செல்’ எனும் சொல்

டேவிட் பால்டிமோர்

மனித வரலாற்றில் சில கண்டுபிடிப்புகள் மட்டுமே பூமிப்பந்தைப் புரட்டிப்போடும். சக்கரம், பென்சிலின், கணினி, இணையம்… இந்த வரிசையில் அடுத்ததாக வரும் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர் டேவிட் பால்டிமோர். அவரது கண்டுபிடிப்பு இன்றைய மரபணு சிகிச்சை, HIV சிகிச்சை, புற்றுநோய் மருந்துகள் – இவை அனைத்திற்கும் அடித்தளமாக அமைந்தது.

அது ஒரு வழக்கமான மாலை நேரம். MITஇன் 16-310 அறையில் இளம் விஞ்ஞானி டேவிட் பால்டிமோர் தனது சக ஆசிரியர்களுக்கு முன் நின்றார். அவர் சொல்ல வந்தது அன்றுவரை மருத்துவ உலகம் நம்பிய ஓர் அடிப்படை கோட்பாட்டையே தூக்கியெறிந்தது!

‘DNAஇல் இருந்து RNAக்கு, அங்கிருந்து புரதங்களுக்கு – இதுதான் செயல்முறை’ என்று நம்பப்பட்ட மையக் கோட்பாட்டை பால்டிமோர் தலைகீழாக மாற்றினார். ‘RNAஇல் இருந்து DNAக்கும் செல்ல முடியும்’ என்று நிரூபித்தார். பால்டிமோரின் நண்பர் போட்ஸ்டீன் அந்தக் கூட்டத்தில் இருந்தார். பால்டிமோர் பேசி முடித்ததும், அவர் தனது நண்பரிடம் ‘இந்தக் கண்டுபிடிப்புக்காக டேவிட் நிச்சயம் நோபல் பரிசு வெல்வார்’ என்று சொன்னார். சில ஆண்டுகள் கழித்து அது நடந்தது!

டேவிட் பால்டிமோர் 1938இல் நியூயார்க்கில் பிறந்தார். சிறுவயதிலேயே அவரது திறமை தெரிந்தது. உயர்நிலைப் பள்ளியில் கணித வீட்டுப்பாடத்திற்கு அவர் எழுதுவது வெறும் விடைகள் மட்டுமே, ஏனென்றால் முழுக் கணக்கையும் மனதிலேயே போட்டுவிடுவார்! ஆனால் அவரது வாழ்க்கையை மாற்றியது ஒரு கோடைக்கால வேலை. மெய்னில் உள்ள ஜாக்சன் ஆய்வகத்தில் மரபியல் ஆராய்ச்சியில் பங்கேற்றார். அங்கிருந்து திரும்பியபோது ‘ஆராய்ச்சியிலும் கற்பித்தலும்தான் என் வாழ்க்கை இருக்க வேண்டும், ஏனெனில் நான் ஒரு புரட்சி யுகத்தில் வாழ்கிறேன்’ என்றார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!