Home » G இன்றி அமையாது உலகு – 8
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 8

8. புதிய காசோலை, புதிய நிறுவனம்

ஆண்ட்ராஸ் வான் பெக்டோல்ஷிம் (Andy Von Bechtolsheim) என்கிற ஆண்டி பெல்டோக்‌ஷிம் என்பவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்கே ஆதர்சமான முன்னாள் மாணவர். பல வகுப்புகளில், ஒன்றுகூடல்களில், திட்ட ஏற்பாட்டுப் பாசறைகளில் அவர் பெயரை முன்மொழியாது உரையாடல்கள் துவங்காது. ஒரு சூப்பர் ஸ்டார் மாணவராக இருந்து, ஆராய்ச்சிகளை முன்னெடுத்து 1982-ல் SUN என்கிற முன்னோடிக் கணினி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, சரசரவெனெத் தொழிலில் முன்னேறி அன்று அந்த நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய ஜாம்பவனாக வளர்ந்திருந்தவர். நுட்பம், சம்பாதித்தல் என்ற இரண்டிலும் உச்சம் தொட்டிருந்ததால் அவர் மீதான மரியாதையும், அவர் வார்த்தைக்குப் பெருமதிப்பும் இருந்தன.

தவிர, இரு தசாப்தங்களாகக் கணினி, இணையத் துறைகளில் பழம் தின்று கொட்டை போட்ட அவருக்கு, தொலைநோக்குத் திட்டங்கள், பின்னாளில் பெரும்பேறு ஈட்டப்போகும் முன்னோடி ஐடியாக்களின் மீதான கண்ணோட்டம் மிக அதிகமாக இருந்தது. லாரி, செர்கேவின் வசமிருந்த தேடற்பொறியின் முக்கியத்தை உணர்ந்திருந்த அவர்களின் ஆசிரியர்களில் ஒருவரான டேவிட் செரிடன் (David R. Cheriton), இவர்களின் நிரல்மொழியை விற்றுவிடும் தவிப்பில் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உதவிகேட்டு அலைந்துகொண்டிருக்கும் தவிப்பைப் பார்த்து அவர்களுக்கு ஏதேனும் செய்யவேண்டுமே என்று நினைத்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!