6. எழுத்துப் பிழை
லாரிக்கும் செர்கேவுக்கும் பேக்ரப்பை (Backrub) முற்றிலும் இணையத் தேடலுக்கான செயலியாக மாற்றும் எண்ணம் உருவாகிவிட்டது. அதற்கான முதல்படியாக அவர்கள் திட்டமிட்டது, மொத்த இணையத்தையும் தரவிறக்குவதுதான். அதாவது கோடிக் கோடி எண்ணிக்கைகளாக குவிந்து கிடக்கும் அத்தனை இணையப் பக்கங்களையும் லோக்கல் கணிப்பொறிகளில் தரவிறக்குவது.
யோசித்துப்பார்த்தால் இதைவிட ஒரு மோசமான முடிவு வேறெதும் இருக்குமா தெரியவில்லை. ஏனென்றால் இணையமென்பது அப்போதைக்கப்போதே தன்னைத் தகவமைத்துக்கொண்டு புதுப்புது மாற்றங்களைத் தன்னகத்தே ஏற்றுக்கொண்டு புதுப்புதுப் பக்கங்களாக பிரசவித்துத் தள்ளும் அதிவேகத் தகவல் இயந்திரம். ஒருவேளை அத்தனைப் பக்கங்களையும் தரவிறக்குவதாகவே வைத்துக்கொண்டாலும் இன்று தரவிறக்கியது முழுவதும் நாளையே புதுப்பித்துக் கொள்ளுமே, என்றால் இதே செயலைத் தினந்தோறும் செய்துகொண்டே இருந்தால் சர்வ நிச்சயமாக அதைவிட மோசமான திட்டமிடல் இருக்க முடியுமா?
Add Comment