மிக மூத்த காந்தியவாதியும், சுதந்தரப் போராட்ட வீரரும், சமூக சேவகருமான குன்வந்த்ராவ் கன்பத்லால் பரிக் (ஜி ஜி பரிக்) தனது 101ஆவது வயதில் காலமானார்.
குஜராத்தில் உள்ள சுரேந்திரா நகரில் 30.12.1924 அன்று பிறந்தவர் பரிக். தாய் தந்தையென இரண்டு குடும்பங்களிலும் சுதந்தரப் போராட்டம் குறித்த எண்ணங்கள் வலுவாக இருந்தன. இவர் பால்யத்தில் பகத்சிங், காந்தி என்ற இரண்டு பேர்களை அடிக்கடி கேட்டு வளர்ந்தார். சித்தாந்தங்கள் வேறாக இருந்தாலும், சுதந்தர இந்தியா என்ற ஒரே எண்ணம்தான் அப்போது மக்கள் மனத்தில் இருந்தது. இவரும் அப்படியே வளர்ந்தார். இளமைக்காலத்துக்கே உரிய வேகத்தால், பகத்சிங் அவருடைய போராட்டங்கள் மூலமாக பரிக்குக்கு ஆதர்ச நாயகனாக இருந்தார்.
காந்தி இவர்களது ஊரைக் கடந்து போகும்போதெல்லாம் பரிக் தனது மாமாவுடன் சென்று அவரைப் பார்ப்பது வழக்கம். அவரைப் பார்த்து, அவரது கொள்கைகளை அறிந்து கொண்டபோது பரிக்கின் மனம் மாறியது. மிகச் சரியான வயதில் நான் காந்தியால் ஆசிர்வதிக்கப்பட்டேன் என்று கூறியிருக்கிறார் பரிக். இனி இவர்தான் தனக்கு எல்லாம், இவர் காட்டுவதுதான் வழி, இவரது வாழ்க்கைதான் தனது வாழ்வியல் என மாற்றிக் கொண்டார்.















Add Comment