எல்லைகள் இருக்கும் வரை போர்கள் ஓயாது. எல்லை இல்லாமல் நடந்தேறிய பல போர்கள் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் நிறைந்து கிடக்கின்றன.அதில் முக்கியமானது இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்.
மத்தியக் கிழக்கில் மத்தியத் தரைக்கடலின் கரையோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நிலப்பகுதி காஸா. இஸ்ரேலும் எகிப்தும் கட்டுப்படுத்தும் எல்லைகளுக்குள் சிக்கிய இந்த நிலம், இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் வாழ்விடம். காஸாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு 2023 அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலுக்கு எதிராக நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட இஸ்ரேல் ஹமாஸ் போர் காஸா மக்களின் வாழ்க்கையை முழுமையாகச் சிதைத்துள்ளது.
அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் சூத்திரதாரிகள் முகமது டேயிஃப், இஸ்மாயில் ஹனியே மற்றும் மற்றும் யேஹ்யா சின்வர். இவர்கள் மூவரும் ஹமாஸை வழிநடத்திய தலைவர்களில் முதன்மையானவர்கள். சின்வாரின் முன்னோடி இஸ்மாயில் ஹனியே, 2024இல் இரானில் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டார்.















Very interesting topic