இன்று மட்டும் கிங் அண்ட் குயின்
இன்ஸ்டா பதிவுகளை இலக்கில்லாமல் தள்ளிக் கொண்டிருந்தான் ரிஷி. ஃபோட்டோஹாலிக். தீப்தி படத்தைப் பார்த்ததும் கட்டைவிரல் தானாக நின்றது. அபார்ட்மென்ட் மாடியில் ஆரஞ்சு சூரியனுக்கு கொரியன் ஹார்ட் காட்டும் ஃபோட்டோக்களைப் பகிர்ந்திருந்தாள். கறுப்பு கிராப் டாப், தொடைப் பக்கம் கிழிந்த பேகி ஜீன்ஸ், நெற்றியை மறைக்கும் ஃபேங்க்ஸ் முடி, பெரிய சைஸ் பூனைக்கண் கண்ணாடி என பிளாக்பிங்க் பாடகி லீசாவைப் போல ஸ்டைலாக இருந்தாள் தீப்தி.
“ஃபுல் வைப் ப்ரோ” என்று டைப் செய்து உடனே அழித்தான் ரிஷி. “நோ கேப். உன்னுடன் ஒப்பிடுகையில் சூரிய அஸ்தமனம் மிட்” என்று எழுதிப் பார்த்தான்.
“ஏன் ப்ரோ இப்டி சிம்ப்பா இருக்க?” பின்னாலிருந்து வந்தான் உடன் பணிபுரியும் கார்த்திக். ரிஷி அவசரமாக இன்ஸ்ட்டாவை மூடி மொபைலைப் பூட்டினான்.
“சிம்ப்பிங்க்லாம் கிடையாது. நாங்க மியூச்சுவல்ஸ்தான்”
“ம்க்கூம். நானும் கவனிச்சுட்டுதான் இருக்கேன். நீ அவ இன்ஸ்ட்டா பக்கத்தைப் பல காலமா ஜோம்பியிங்க் பண்ற.”
“ம்ம்… காலேஜ்ல ஒரே கேங்லதான் இருந்தோம் ப்ரோ. அவளுக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சுப் போயிட்டா. இப்ப ஒரு ஸ்டார்ட்டப் கை-யோட கொலாப் பண்ணிட்டிருக்கா.”















Add Comment