Home » Gen Z: ஒரு தலைமுறையின் கதை – 12
Gen Z தொடர்கள்

Gen Z: ஒரு தலைமுறையின் கதை – 12

ஷாம்பெயின் பாட்டிலும் நடனமாடும் மங்கையும்

வழக்கு ஒன்று – கனடா

தானியங்களின் மொத்த விற்பனையாளர் கிறிஸ் ஆக்டர். மார்ச் மாதம் தன்னுடைய வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் ஆளி விதைகள் விற்பனை குறித்த குறுஞ்செய்தியை அனுப்பினார். விதைகளை வாங்க விரும்பி அவரைத் தொடர்பு கொண்டார் கென்ட்.

‘விதைகள் நவம்பர் மாதம்தான் டெலிவரி செய்யப்படும், எனவே இத்தனை மெட்ரிக் டன் விதைகளை இந்த விலைக்கு வாங்கிக் கொள்கிறேன்’ என ஓர் ஒப்பந்தத்தைத் தயாரித்து வாட்ஸப்பில் அனுப்பினார் கென்ட். ஒப்பந்த விதிகளுக்குச் சம்மதமா என்றும் கேட்டார். அதற்குத் தம்ஸ் அப் எமோஜியைப் பதிலாக அனுப்பினார் கிறிஸ்.

ஆனால் நவம்பர் மாதத்தில் விதைகளின் விலை ஏறிவிட்டது ‘ஒப்பந்தத்தின்படி கிறிஸ் விதைகளை அனுப்பாமல் ஏமாற்றிவிட்டார்’ என அவர் மீது வழக்குத் தொடுத்தார் கென்ட். ‘நான் எந்த ஒப்பந்தப் பத்திரத்திலும் கையெழுத்துப் போடவில்லை, வாட்ஸப்பில் வந்த டிஜிட்டல் பத்திரத்தைப் பார்த்துவிட்டேன் என்பதைக் குறிக்கும் வகையில் வாட்சப்பில் தம்ஸ் அப் மட்டும்தான் போட்டேன்’ என வாதாடினார் கிறிஸ்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!