Home » Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 27
Gen Z தொடர்கள்

Gen Z : ஒரு தலைமுறையின் கதை – 27

ஸ்மார்ட் வாட்ச்சும் கருங்காலி மாலையும்

வெள்ளிக்கிழமை காலை. மயிலாப்பூரில் ஒரு விடுதியில் வசிக்கும் காவ்யா எழுந்தவுடன், சிறிய விநாயகர் சிலைக்கு முன் வைத்திருந்த மின்சார அகல் விளக்கை ஆன் செய்தாள். அலைபேசிச் செயலியில் அன்றைய ராசிபலனைப் பார்த்துவிட்டு ஸ்பாட்டிஃபையில் கந்தசஷ்டிக் கவசத்தை ஒலிக்கவிட்டாள். குடும்ப வாட்சப் குழுவில் வந்திருந்த ஒரு பகவத் கீதை வரியை இன்ஸ்டாவில் ஸ்டோரியாக வைத்தாள்.

ஒரு கையில் ஸ்மார்ட் வாட்ச்சையும், மறுகையில் கருங்காலி மணியினால் செய்யப்பட்ட பெண்டெண்ட்டையும் அணிந்து கொண்டு வேலைக்குக் கிளம்பினாள். அங்கே மாலையில் நடைபெற்ற ‘மைன்ட்ஃபுல்னஸ் மெடிட்டேஷன்’ வகுப்பிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டாள்.

*

ஜென் ஸீ இளைஞர்களின் ஆன்மிகச் சுற்றுலா ஆர்வத்தைக் குறித்து ஏற்கெனவே பார்த்தோம். போலவே, வழிபாடுகளிலும் ஆன்மிகத்திலும் இவர்களுக்கு நாட்டம் உண்டு. ஆனால் பழைய பாணியில் சடங்குகளைக் கறாராகப் பின்பற்றுவதாக இல்லாமல், தங்களுக்குப் பயனளிக்கும் வகையில் அவற்றை மறுவடிவமைத்துக் கொண்டிருக்கின்றனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!