மொராக்கோ, மடகாஸ்கர், கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் ஜென் ஸீ இளைஞர்களின் போராட்டங்கள் வெடித்துள்ளன.
1996ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்களை ஜென் ஸீ தலைமுறையினர் என்கிறார்கள். முழுவதுமாகக் கணினிக் காலத்தைச் சேர்ந்த முதல் தலைமுறையினர். இவர்களுக்குச் சமூக ஊடகங்களைத் திறனோடு பயன்படுத்தத் தெரியும். இவர்களுடைய தலைமுறையில் கல்வியறிவு பெற்றவர்கள் அதிகம். புதிய தொழில்நுட்பங்களை எளிதில் கற்றுக்கொள்ள வல்லவர்கள். அறம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொருளாதாரம், ஆரோக்கியம், மனித உரிமைகள், சமத்துவம், தற்சார்பு, கருத்துச் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு கொண்டவர்கள். அதனாலேயே அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது இவர்களின் இயல்பாக உள்ளது.
சமீப காலங்களில் ஆசிய நாடுகள், குறிப்பாக, தெற்காசிய நாடுகள் ஜென் ஸீ இளைஞர்களின் போராட்டக் களங்களாக மாறிவருவதைப் பார்க்க முடிகிறது. 2022இல் இலங்கை, 2024இல் வங்கதேசம், போன மாதம் நேபாளம் என மூன்று நாடுகளில் ஆட்சியைக் கவிழ்த்தார்கள். ஆட்சியாளர்களை ஓட ஓட விரட்டினார்கள். தொடர்ந்து பிலிப்பைன்சிலும் இந்தோனேஷியாவிலும் இதேபோன்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.














Add Comment