கூகுள் நிறுவனம், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஏஐ டேட்டா சென்டரை அமைக்க இருக்கிறது. அடுத்த ஐந்து வருடங்களில் இதற்காக 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருக்கிறது. அதற்கான ஒப்பந்தக் கூட்டத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கூகுள் க்ளவுடின் சிஇஓ தாமஸ் குரியன் ஆகியோர் பங்கேற்றனர்.
கூகுளின் இந்த டேட்டா சென்டர், முழுக்கவே செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்காகக் கட்டமைக்கப்படுகிறது. இது கிகா வாட் அளவுக்கான மின்சக்தியைப் பயன்படுத்தும் என்பதிலிருந்து இதன் திறனை நாம் உணர்ந்து கொள்ளலாம். இத்திட்டத்துக்காகக் கடலுக்கடியில் புதிய ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் அமைக்கப்பட இருக்கின்றன. கேபிள் அமைக்க ஏர்டெல் நிறுவனமும், மின்சார உற்பத்திக்காக அதானி கனெக்ஸ் நிறுவனமும் கூகுளுடன் இணைந்து பணியாற்ற உள்ளன.
கிகா வாட் அளவுக்கான மின்சாரத் தேவையில் பெரும்பான்மையை சோலார் பேனல்கள் மற்றும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்ய முடிவெடுத்திருக்கிறது கூகுள். இதனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்க முடியுமெனக் கூறினாலும், அதிலும் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால், மின்சார பேட்டரிகளின் உற்பத்தி அதிக அளவிலான மாசுபாட்டை உண்டாக்கக் கூடியது.














மகிழ்ச்சி நண்பர் அசோக் ராஜ், சிறப்பான கட்டுரை ஆக்கம். வாழ்த்துகள்.