Home » குஜராத்திகளின் நவராத்திரி
திருவிழா

குஜராத்திகளின் நவராத்திரி

ஒன்பது நாள் நவராத்திரிப் பண்டிகை இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழ்நாட்டில் வீடுகளிலும் கோயில்களிலும் கொலு வைத்துக் கொண்டாடி முடித்தார்கள். இங்கே தமிழ்நாட்டில் உள்ள குஜராத்திகள் நவராத்திரியை எப்படிக் கொண்டாடினார்கள்?

நேற்று நிறைவடைந்த விழாவைக் குறித்து இப்போது என்ன என்று தோன்றுகிறதா? பக்கத்தில் ஏதாவது ஆட்டோ ஸ்டாண்ட் இருந்தால் போய்ப் பாருங்கள். ஆயுத பூஜையெல்லாம் முடிந்து நான்கைந்து நாள்களுக்குப் பிறகுகூட அவர்கள் பூஜை போடுவார்கள். இந்தக் கட்டுரை அந்த வகை!

குஜராத்திகள் கொண்டாடும் நவராத்திரிப் பண்டிகைக்கான பின்னணி புராணக் கதையுடன் தொடர்புடையது. அரக்கன் மஹிஷாசுரன் கடும் தவமிருந்து, தவத்தின் பலனாக அவனுக்குக் காட்சியளித்த அக்னித் தேவனிடம், ‘எந்த ஆயுதத்தாலும் தான் அழியக்கூடாது.’ என்ற வரம் கேட்டுப் பெற்றான். வரம் பெற்ற மஹிஷாசுரன் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் தலைகால் புரியாமல் தவறுகள் செய்தான். தேவலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள அனைவரையும் துன்புறுத்தினான். அச்சமடைந்த தேவர்களும் தேவதைகளும் சிவபெருமானிடம் மஹிஷாசுரனின் அக்கிரமங்களை முறையிட்டு தங்களை அவனிடமிருந்து காக்கும்படி வேண்டினர்.

சிவபெருமான் பிரம்மா மற்றும் விஷ்ணுவுடன் இணைந்து மஹிஷாசுரனை அழிக்க ஒரு பெண் சக்தியை உருவாக்கினார். அப்பெண் சக்தி ஒன்பது நாட்கள் பகலும் இரவும் இடைவிடாமல் சண்டையிட்டுப் பத்தாம் நாள் அந்த அசுரனின் தலையைத் துண்டித்தது. அந்தப் பெண் சக்திதான் துர்கா மாதா. அதாவது துர்க்கை அம்மன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!