Home » ஹேக்கிங் : ​மிரட்டும் துறை
குற்றம்

ஹேக்கிங் : ​மிரட்டும் துறை

பிரித்தானியாவின் பெரும் வணிக நிறுவனங்கள் பற்றிய செய்திகள் கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் வழக்கத்தைவிட அதிக கவனம் பெறுகின்றன. இந்த நிறுவனங்கள் அவர்களது வணிக வெற்றி தோல்விகளால் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. மாறாக அவர்களது கம்பியூட்டர் சிஸ்டங்களும் நெட்வோர்க்குகளும் ஹேக்கிங்கினால் பாதிக்கப்படுவதே ஊடகங்களின் அதிக கவனத்துக்குக் காரணம்.

ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் எம் அண்ட் எஸ் எனச் சுருக்கமாக அழைக்கப்படும் மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர்ஸ் நிறுவனத்தின் கணினிகள் ஹேக்கிங் செய்யப்பட்டதாகச் செய்திகள் வந்தன. விளைவாக முதலில் அவர்கள் ஆன்லைன் ஆர்டர்கள் எடுப்பதை நிறுத்தினார்கள். அத்துடன் அவர்களது வியாபார ஸ்தலங்களில் பொருள்களின் தட்டுப்பாடு கவனிக்கப்பட்டது. ஹேக்கிங் செய்யப்பட்ட கம்பியூட்டர் சிஸ்டங்களை மீள்கொண்டு வருவது ஒன்றும் சுலபமான காரியமல்ல. அதற்கு எடுக்கும் காலதாமதம் பல மில்லியன்களில் விற்பனையைப் பாதிக்கும்.

அடுத்து Co-op எனப்படும் சூப்பர் மார்க்கெட்டும் ஹேக்கர்களுக்கு இலக்கானது. இவர்களுக்கு உண்டான பாதிப்பு எம் அண்ட் எஸ் அடைந்த பாதிப்பைவிடக் குறைவு எனச் செய்திகள் மூலம் அறியக் கூடியதாக இருக்கிறது. அதற்கான காரணம் ஹேக்கிங் செய்பவர்கள் தங்களது ரான்சம்வேர் மென்பொருள்களை அவர்களது கணினிகளில் நிறுவுவதற்கு முன்னரே அவர்கள் தங்களுடைய சிஸ்டங்களை யாரோ ஊடுருவுகிறார்கள் எனக் கண்டு பிடித்து விட்டார்கள். உடனடியாக இழுத்து மூடி விட்டார்கள். இப்படி இழுத்து மூடுவதால் கடைகளில் பொருள்கள் இல்லாமல் போகும். அதனால் பெரு நஷ்டம் உடனடியாக ஏற்படலாம். ஆனாலும் அதை ஏற்றுக் கொண்டு உடனடி நடவடிக்கை எடுப்பது அவர்களுக்கு ஹேக்கர்களினால் வரக் கூடிய பாதிப்பை விட மேலானது என்பதே காரணம். அப்படி இருந்த போதும் இவர்களிடமும் பல்வகையான தகவல்கள் திருடப்பட்டு விட்டதாகவே தெரிகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!