Home » இனிக்க இனிக்கக் கொண்டாடு!
விழா

இனிக்க இனிக்கக் கொண்டாடு!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பார்கள். குறிப்பாக, மத்தியக் கிழக்கு நாடுகளில் ரமலான் மாதத்துக்கு முன்பே அதற்கான தயாரிப்புகள் தொடங்கிவிடும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கொண்டாடப்படும் இந்த அழகான கலாசார விழாவுக்கு ‘ஹக் அல் லைலா’ என்று பெயர்.

இஸ்லாமிய நாள்காட்டியின் ஷாபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இது கொண்டாடப்படுகிறது. ரமலான் மாதத்துக்குச் சரியாக இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் இது நிகழும். ரமலான் மாதத்தின் நோன்புக்கும், அதன் மகத்துவத்துக்கும் குழந்தைகளைத் தயார்ப்படுத்தும் விதமாக இந்த விழா நடைபெறுகிறது.

அரபு மொழியில் ‘ஹக் அல் லைலா’ என்பதற்கு ‘இந்த இரவுக்கான உரிமை’ அல்லது ‘இந்த இரவுக்கான உண்மை’ என்று பொருள். ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டுமன்றி மற்ற வளைகுடா நாடுகளிலும் இந்தப் பாரம்பரியம் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. கத்தாரில் ‘கரங்காவ்’, பஹ்ரைனில் ‘கெர்காவுன்’, ஓமானில் ‘கரங்கேஷோ’. குவைத்திலும் சவுதி அரேபியாவிலும் இது ‘கர்கியான்’ என்று அழைக்கப்படுகிறது. இடத்துக்கு இடம் பெயர் மாறினாலும் இதன் அடிப்படை நோக்கமும் உற்சாகமும் ஒன்றுதான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!