Home » தனிப் பெருங்கருணைக்குத் தலைநகரில் ஒரு விழா
விழா

தனிப் பெருங்கருணைக்குத் தலைநகரில் ஒரு விழா

வள்ளலார் இராமலிங்க அடிகளுக்கு அனைத்துலக மாநாடு 15 பிப்ரவரி அன்று இந்து அறநிலையத்துறை சார்பில் அரசு விழாவாகச் சென்னையில் நடந்தது. அடுத்த மூன்று நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகளில் வள்ளலாரின் வாழ்க்கையை விவரிக்கும் ஓவியக் கண்காட்சி , மூலிகை பூங்கா, புத்தகக் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன.

பிப்ரவரி 15ஆம் தேதி நிகழ்வில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிருந்தும் அவரது மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களும் வெளிநாட்டு அறிஞர்களும் கலந்துகொண்டனர். காலை ஆறு மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சிகளில் ஐந்து லட்சம் பேர் கலந்துகொண்டனர் என்றார் நிர்வாகி ஒருவர். நாள் முழுவதும் உணவு வழங்கப்பட்டுக் கொண்டே இருந்ததைப் பார்க்க முடிந்தது. எட்டு லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டதாகச் சொன்னார்கள்.

திருவெற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் சாலை என்று பெயரிடப்பட்டதையும், வள்ளலாருக்குச் சென்னையில் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் விழாவில் அறிவித்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!