Home » பல்கேரியா: மாறிய ஆட்சி; மாறுமா காட்சி?
உலகம்

பல்கேரியா: மாறிய ஆட்சி; மாறுமா காட்சி?

ருமென் ராதெவ்

ஐரோப்பாவின் தென்கிழக்கு எல்லையில் இருக்கும் பல்கேரியாவில் சென்ற வாரம் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த ஹங்கேரியின் தேர்தல் போல் பரப்பரப்பான ஒன்றாக இல்லாவிடினும், தன்னளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. அதற்குக் காரணம், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்கேரியா எதிர்கொண்ட எட்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இது.

ருமென் ராதெவ் (Rumen Radev) என்பவரை பல்கேரிய மக்கள் தங்களது பிரதமராகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவருடைய ‘முற்போக்கு பல்கேரியா’ கட்சி, 240 இடங்களைக் கொண்டுள்ள நாடாளுமன்றத்தில் 135 இடங்களில் வென்றுள்ளது. இதன் மூலம், 1997ஆம் ஆண்டுக்குப் பிறகு பல்கேரியாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

இதில் வியத்தகு விஷயம் என்னவென்றால் ருமென் ராதெவ் தனது கட்சியைத் தொடங்கி நான்கு மாதங்களே ஆகின்றன. புதிதாகக் கட்சி தொடங்கி, வலுவான கூட்டணி ஒன்றை அமைத்து, வெற்றிகரமாக ஆட்சியையும் பிடித்துவிட்டார் ராதெவ். தமிழ்த் திரைப்படங்களில் ஒரே பாடலில் கதாநாயகன் அடையும் உயரத்துக்கு ஒப்பாகச் சொல்லலாம் இதனை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!