உலக வரலாற்றில் ஒரு விஷயம் திரும்பத் திரும்ப நடக்கிறது.
ருவாண்டாவிலும், யூகோஸ்லாவியாவிலும், சிரியாவிலும், இந்தியப் பிரிவினையிலும் கதைகள் வெவ்வேறாக இருந்தாலும், அவற்றின் மையப்புள்ளி ஒன்றுதான்.
கொன்றவர்கள் எப்போதும் அந்நியர்கள் அல்ல, நேற்றைய நண்பர்களே. திடீரென்று ஒரு பிரிவு வருகிறது. ஒரு கோடு வரையப்படுகிறது. ‘நம்மவன்’ vs ‘அவன்’ என்று மாறுகிறது. அவ்வளவுதான். யுத்தம் தொடங்கிவிடுகிறது.
நாம் இதற்கு மதம், இனம், அரசியல் என்று பல காரணங்களைச் சொல்கிறோம். ஆனால் இப்போது உகாண்டாவின் ஒரு காட்டில் நடக்கும் நிகழ்வு நம்மை திடுக்கிட வைக்கிறது. மதமும், இனமும், அரசியலும் இல்லாத சிம்பன்ஸிகளுக்குள்ளும் இதே யுத்தம் நடைபெற்று வருகிறது.
2026 ஏப்ரல் 9 அன்று Science இதழில் வெளியான ஓர் ஆய்வு உலகை அதிர வைத்துள்ளது. முப்பது ஆண்டுகால ஆய்வு. இருநூறு சிம்பன்ஸிகள். ஒரு யுத்தம்.















Add Comment