Home » ஏசி நெடுஞ்சாலை
உலகம்

ஏசி நெடுஞ்சாலை

துபாய் இப்போது உலகையே ஆச்சரியப்படுத்தும் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதன் பெயர் ‘THE LOOP’. துபாயின் சாலைகளில் ஒவ்வொரு நாளும் வாகன நெரிசலில் சிக்கி, தங்கள் வாழ்நாளின் கணிசமான பகுதியைப் பயணத்திலேயே தொலைக்கும் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது.

உலகையே வியப்பில் ஆழ்த்தும் இந்தத் திட்டம், தொண்ணூற்று மூன்று கிலோமீட்டர் நீளத்துக்குப் பிரம்மாண்டமான குளிரூட்டப்பட்ட கண்ணாடி வளைவுக் கூண்டுக்குள் (Glass Atrium) அமைக்கப்படவுள்ளது. இங்கே கார்களுக்கோ, பேருந்துகளுக்கோ இடமில்லை. நடைப்பயணம், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பயிற்சி ஆகியவற்றுக்காக மட்டும் இந்தத் திட்டம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மனிதர்களுக்காகக் கட்டப்படும் உலகின் முதல் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படுகிறது.

URB என்னும் நகரத் திட்டமிடல் நிறுவனம் வடிவமைத்துள்ள இந்தத் திட்டத்தின் பின்னால் மகத்தான ஓர் இலக்கு உள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் துபாயின் முப்பது லட்சம் மக்களில் எண்பது சதவீதத்தினர் தங்கள் வாகனங்களை விட்டுவிட்டு, நடந்தோ அல்லது சைக்கிள் மூலமாகவோ பயணிக்க வைப்பதே இதன் நோக்கம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!